ஆப்நகரம்

ஆலை திறக்க தடை: உச்ச நீதிமன்றம் சென்ற ஸ்டெர்லைட்!

ஆலையை நிரந்தரமாக மூட தடை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

Samayam Tamil 26 Aug 2020, 1:00 pm
சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிப்பதோடு, மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். 2018 மே மாதம் நடைபெற்ற போராட்டத்தில் அப்பாவி மக்கள்13 பேர் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
Samayam Tamil sterlite


தொடர்ந்து எதிர்ப்பு வந்த நிலையில் ஆலையை மூட தமிழக அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த தடையை ரத்து செய்ய வேண்டும் என ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பு ஒன்றை வழங்கியது.

ஆலையை நிரந்தரமாக மூடிய தமிழக அரசின் உத்தரவு செல்லும் என அறிவித்தது. தமிழக மக்கள் மத்தியில் இந்த தீர்ப்பு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.

பள்ளிகள் திறப்பு: தமிழ்நாடு அரசு அதிகாரபூர்வ முடிவு!

இந்நிலையில் இன்று இந்த தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது.

ஸ்டெர்லைட் நிறுவனம் மேல்முறையீடு செய்வதற்கு முன்னர் ஸ்டெர்லைட் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக யாரேனும் மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறபிக்க கூடாது என தமிழக அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி