ஆப்நகரம்

தமிழக துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

எண்ணூர், புதுச்சேரி, நாகை, கடலூர், காரைக்கால், பாம்பன் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Samayam Tamil 11 Jun 2018, 12:53 pm
எண்ணூர், புதுச்சேரி, நாகை, கடலூர், காரைக்கால், பாம்பன் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Samayam Tamil cats
தமிழக துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

வங்க தேசத்துக்கும் வங்கக்கடலுக்கும் இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எண்ணூர், புதுச்சேரி, நாகை, கடலூர், காரைக்கால், பாம்பன் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடியில் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த செய்தி