ஆப்நகரம்

கொரோனா உயிரிழப்பு: உயர் நீதிமன்ற மதுரை கிளை கடும் எச்சரிக்கை

கொரானாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய பணம் கேட்பதாக தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

Samayam Tamil 21 Jul 2020, 5:03 pm
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. சென்னையில் பாதிப்புகள் அதிகரித்து வந்த நிலையில், மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் தற்போது தொற்று அதிகரித்து வருகிறது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


மதுரையை பொறுத்தவரை 8,357 பேர் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் கொரோனா அதிகரித்து வருவதால் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்துள்ளது. உயர் நீதிமன்ற கிளையின் பதிவாளர் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், கொரோனா பரிசோதனை முடிவு அறிவிப்பதில் ஏற்படும் தாமதத்திற்கு என்ன காரணம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்த விவரங்கள் என்ன என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை நீதிமன்றம் கேள்வியாக எழுப்பியிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்த போது, மதுரையில் மாரடைப்பு ஏற்படும் நோயாளிகளை கூட, தனியார் மருத்துவமனைகள் அனுமதிக்க மறுப்பது ஏன் என்று சரமாரியாக நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இளையராஜா, போட்டோகிராபி... மதுரை டூ டெல்லி: யார் இந்த அமுதா ஐஏஎஸ்!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்கிற்கு 15 ஆயிரம் வரை கேட்டு நிர்பந்தம் செய்யப்படுவதாக தகவல் வருகிறதே என்று வினவிய நீதிமன்றம், கொரானாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய பணம் கேட்பதாக தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், இது தொடர்பாக மதுரை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

அடுத்த செய்தி