ஆப்நகரம்

செப்டமர் 21 தேதி அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம்!

தமிழக அரசு தடையை மீறி வருகின்ற செப்டம்பர் 21ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அரசு மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

Samayam Tamil 18 Sep 2018, 12:02 pm
தமிழக அரசு தடையை மீறி வருகின்ற செப்டம்பர்21ஆம் தேதி வேலை நிறுத்தத்தில்ஈடுபட உள்ளதாக அரசு மருத்துவர்கள்அறிவித்துள்ளனர்.
Samayam Tamil download (2)


அரசு மருத்துவர்கள் விதிகளின்படி, அனுபவத்தின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி வரும் 21ஆம் தேதி மாநிலம் தழுவிய அடையாள வேலைநிறுத்தப் போரட்டத்தில்ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தனர்.ஆனால்இந்தப் போராட்டத்துக்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது.தடையை மீறி போரட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அனைத்துஅரசுமருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் செந்தில், திட்டமிட்டபடி தங்களது அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.இதில் அவசர சேவைகள் மட்டும் அளிக்கப்படும் என்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள்இஎஸ்ஐ மருத்துவர்கள் உள்பட 20,000 பேர்வேலைநிறுத்தத்தில்கலந்து கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் பல முறைபேச்சுவார்த்தை நடத்தியும்அரசு உரியபதிலளிக்கவில்லை என்று கூறிய அவர், இந்த வேலை நிறுத்தம் தங்களின் மேல் திணிக்கப்பட்ட ஒன்று என்றும் கூறினார். அதனைத்தொடர்ந்துஜனநாயக வழியிலேயே போரட்டத்தைநடத்த உள்ளதாக செந்தில் கூறினார்.

அடுத்த செய்தி