ஆப்நகரம்

நல்லக்கண்ணு கோாிக்கையை தொடா்ந்து உண்ணாவிரதத்தை திரும்ப பெற்ற மாணவா்கள்

நீட் தோ்வுக்கு எதிராக கடந்த 8 நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவந்த திருச்சி கல்லூாி மாணவா்கள் நல்லக்கண்ணு கேட்டுக் கொண்டதைத் தொடா்ந்து உண்ணாவிரதத்தை திரும்பப் பெற்றுக் கொண்டனா்.

TOI Contributor 9 Sep 2017, 10:05 pm
நீட் தோ்வுக்கு எதிராக கடந்த 8 நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவந்த திருச்சி கல்லூாி மாணவா்கள் நல்லக்கண்ணு கேட்டுக் கொண்டதைத் தொடா்ந்து உண்ணாவிரதத்தை திரும்பப் பெற்றுக் கொண்டனா்.
Samayam Tamil students received the struggle
நல்லக்கண்ணு கோாிக்கையை தொடா்ந்து உண்ணாவிரதத்தை திரும்ப பெற்ற மாணவா்கள்


மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரியும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், ஜல்லிக்கட்டு போராட்டக்குழுவினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி எதிரே கடந்த 8 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று திருச்சியில் நடந்த நீட் தேர்வுக்கு எதிரான அனைத்து கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லகண்ணு உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர். மூத்த அரசியல்வாதியான நல்லகண்ணுவின் கோரிக்கையை ஏற்று மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனையடுத்து மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு பழச்சாறு கொடுக்க போராட்ட்ம முடிவுக்கு வந்தது.

இதையடுத்து மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது. மாணவர்களின் போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது : தாழ்த்தப்பட்ட சமுதாயத்ததை சேர்ந்த மாணவி அனிதாவின் தற்கொலைக்கு முறையான நீதி வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரம் இருந்து வந்தார்கள். அவர்களின் உணர்வுகளை எண்ணிப்பார்த்து மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல் அரசு காவல்துறையினரை வைத்து மிரட்டுவது கண்டனத்திற்குரிய செயல். தங்களின் உரிமைகளுக்காகவே மாணவர்கள் போராடுகின்றனர்.
திருச்சியில் 8 நாட்களாக இந்த மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடலை வருத்திக்கொண்டு மேற்கொள்ளும் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடும்படி கேட்டு கொண்டதின் பேரில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர் என்று தொிவித்தாா்.

அடுத்த செய்தி