ஆப்நகரம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி இலவச ஷூ: அரசாணை வெளியீடு

மாணவர்களுக்கு இதுவரை அரசு தரப்பில் செருப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், இனிமேல் சப்பாத்துகள் ( ஷுவுக்கு தமிழில் சப்பாத்து என்று பெயர் ) வழங்கப்படும் என்ற இந்த அறிவிப்பை அமல்படுத்தும் விதமாக அரசாணை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு.

Samayam Tamil 21 Nov 2019, 4:27 pm
தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், தற்போது 6ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச ‘ஷூ’ வழங்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
Samayam Tamil minister-senkottaiyan

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக ஷூ வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கடந்த ஜூலை மாதம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து இருந்தார்.

மாணவர்களுக்கு இதுவரை அரசு தரப்பில் செருப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், இனிமேல் சப்பாத்துகள் ( ஷுவுக்கு தமிழில் சப்பாத்து என்று பெயர் ) வழங்கப்படும் என்ற இந்த அறிவிப்பை அமல்படுத்தும் விதமாக அரசாணை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு.

குடாவி பறவைகள் சரணாலயத்தில் குவிந்துள்ள வெளிநாட்டுப் பறவைகள்!!

அதேபோல, பாடத்திட்டங்கள் அனைத்தும் யூட்யூபில் (youtube) பதிவேற்றம் செய்யப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் முன்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி