ஆப்நகரம்

கம்யூனிஸ்ட் கமல் ஒரு ஆடம்பர முட்டாள்: சுவாமி கடும் விமர்சனம்!

நடிகர் கமல் ஹாசனை, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

TNN 11 Sep 2017, 9:00 am
சென்னை: நடிகர் கமல் ஹாசனை, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
Samayam Tamil subramaniyan swamy calls kamal as idiot
கம்யூனிஸ்ட் கமல் ஒரு ஆடம்பர முட்டாள்: சுவாமி கடும் விமர்சனம்!


தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதற்கான மேடையை தமது அரசியல் கருத்துக்களை வெளியிடவும் பயன்படுத்தி வருகிறார். இதனால் மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள், கமல் ஹாசனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதனால் ஆவேசமடைந்த கமல், விரைவில் அரசியல் பிரவேசம் என்று கூறும் அளவிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, டிவிட்டரில் நடிகர் கமல் ஹாசனை கடுமையாக சாடியுள்ளார்.

அதில் கமல் ஒரு ஆடம்பர முட்டாள் என்றும், அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் போய் சேரப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். முதலில் அவர் ஒரு முட்டாள்.

He was an idiot first. Then joining party of idiots.— Subramanian Swamy (@Swamy39) September 10, 2017 தற்போது முட்டாள்களின் கட்சியில் போய் சேரப் போகிறார் என்று பதிவிட்டுள்ளார். இந்த டிவிட் சமூக வலைத்தளங்களில் கடும் வைரலாகி வருகிறது. கமலின் ரசிகர்கள் சுப்பிரமணிய சுவாமிக்கு எதிர்வினையாற்றி வருகின்றனர்.

Subramaniyan Swamy calls Kamal as idiot.

அடுத்த செய்தி