ஆப்நகரம்

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு இப்படியொரு நிலைமையா?: கிண்டலடித்த சுப்ரமணியசுவாமி!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக கட்சியின் ஓட்டுகளை விட நோட்டா (NOTA) அதிக ஓட்டுகளைப் பெற்றுள்ளது. இதனை கிண்டலடித்து பாஜக தலைவர் சுப்ரமணிய சுவாமி ட்வீட் செய்துள்ளார்

TNN 24 Dec 2017, 1:00 pm
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக கட்சியின் ஓட்டுகளை விட நோட்டா (NOTA) அதிக ஓட்டுகளைப் பெற்றுள்ளது. இதனை கிண்டலடித்து பாஜக தலைவர் சுப்ரமணிய சுவாமி ட்வீட் செய்துள்ளார்.
Samayam Tamil subramaniyan swamy made a fun tweet about tamilnadu bjp for getting less votes than nota
மத்தியில் ஆளும் பாஜகவுக்கு இப்படியொரு நிலைமையா?: கிண்டலடித்த சுப்ரமணியசுவாமி!


தமிழகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆறு சுற்று வாக்கு வாக்கு எண்ணிக்கையில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள டிடிவி தினகரன், மூத்த கட்சிகளான அதிமுக, திமுகவை விட அதிக ஓட்டுகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.
TN BJP record: A national ruling party gets a quarter of NOTA’s vote. Time for accountability — Subramanian Swamy (@Swamy39) December 24, 2017 இந்நிலையில், பாஜக தரப்பில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட கரு.நாகராஜன் நோட்டா பெற்ற ஓட்டுகளில் கால்பங்கு ஓட்டுகளை பெற்றுள்ளார். இதைக் கலாய்த்து சுப்ரமணிய சுவாமி ட்வீட் செய்துள்ளார்.

அதில்,”தமிழக பாஜக சாதனை: மத்தியில் ஆளும் கட்சி நோட்டா வாங்கிய ஓட்டுகளில் கால்பங்கு மட்டுமே பெற்றுள்ளது. இது பொறுப்பை உணர வேண்டிய நேரம்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி