ஆப்நகரம்

தொடரும் கந்துவட்டி கொடுமை; தேனி ஆட்சியர் அலுவலகத்தில் தாய், மகன் தற்கொலை முயற்சி!

கந்துவட்டி கொடுமையால் தாய், மகன் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 24 Oct 2017, 3:05 pm
தேனி: கந்துவட்டி கொடுமையால் தாய், மகன் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil suicide attempt in theni due to kandu vatti problem
தொடரும் கந்துவட்டி கொடுமை; தேனி ஆட்சியர் அலுவலகத்தில் தாய், மகன் தற்கொலை முயற்சி!


வட்டிக்கு, வட்டி போடும் கந்துவட்டி கொடுமையால் பொதுமக்கள் காலந்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனைத் தடுக்க தமிழக அரசு சார்பில் சட்டம் கொண்டு வரப்பட்டும், பிரச்சனை தீர்ந்தபாடில்லை. இந்நிலையில் நேற்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 4 பேர் கொண்ட குடும்பத்தார் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்தனர்.

அவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுதொடர்பான விசாரணையில் கந்துவட்டி அளித்த தம்பதிகளை போலீசார் கைது செய்தனர். இதன் காயம் ஆறுவதற்குள் இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய் சரஸ்வதி, மகன் ஜெகதீசன் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.

அவர்களை அக்கம்பக்கத்தினர் உடனடியாக தடுத்து நிறுத்தி, காப்பாற்றினர். பாண்டி என்பவரிடம் கடன் பெற்று திருப்பிச் செலுத்தியும், கூடுதல் பணம் கேட்பதாக புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பான வழக்கில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வராததால், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறினர்.

Suicide attempt in Theni due to Kandu Vatti problem.

அடுத்த செய்தி