ஆப்நகரம்

முதல்வர் ஓபிஎஸ் வீட்டு வாயிலில் எல்.இ.டி டிவிகள் மற்றும் ஒலிப்பெருக்கி வைக்கும் பணிகள் தீவிரம்!

முதல்வர் ஓபிஎஸ் வீட்டு வாயிலில் எல்.இ.டி டிவிகள் மற்றும் ஒலிப்பெருக்கி வைக்கும் பணிகள் தீவிரம்!

TOI Contributor 9 Feb 2017, 6:03 pm
நாளுக்கு நாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு பெருகி வருவதால் அவரது வீட்டு வாயிலில் மூன்று எல்.இ.டி டிவிகளும், ஒலிப்பெருக்கிகளும் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
Samayam Tamil supporters of ops lead to his home and planned to keep led tv
முதல்வர் ஓபிஎஸ் வீட்டு வாயிலில் எல்.இ.டி டிவிகள் மற்றும் ஒலிப்பெருக்கி வைக்கும் பணிகள் தீவிரம்!


அதிமுக கட்சி இரண்டாக பிரிந்து சசிகலா அணி மற்றும் பன்னீர் செல்வம் அணி என்று செயல்பட்டு வரும் நிலையில் முதல்வர் பன்னீர் செல்வத்திற்கான ஆதரவு பன்மடங்கு அதிகரித்து வருகிறது. மேலும் நாளுக்கு நாள் அவரது வீடு உள்ள கிரீன்வேஸ் சாலை பகுதிக்கு தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இன்று தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், அதன்பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழகத்திற்கு நல்லதே நடக்கும் என்றார்.

பன்னீர் செல்வத்தின் ஆதரவு பன்மடங்கு பெருகி வருவதால் அவரது வீட்டு வாசலில் மூன்று எல்.இ.டி டிவிகள் மற்றும் ஒலிப்பெருக்கிகள் வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கூட்டம் அதிகமாக இருப்பதால் முதல்வர் பன்னீர் செல்வம் பேசுவது எல்லோருக்கும் கேட்டும் வகையில் இம்மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

அடுத்த செய்தி