ஆப்நகரம்

ரஜினிக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் ஆதரவா?

நடிகர் ரஜினிகாந்துக்கு, தான் ஆதரவு தெரிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி உண்மையல்ல என ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.

TNN 22 May 2017, 10:26 am
நடிகர் ரஜினிகாந்துக்கு, தான் ஆதரவு தெரிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி உண்மையல்ல என ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil supports to rajinikanth ias officer sagayam explain
ரஜினிக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் ஆதரவா?


நடிகர் ரஜினிகாந்த் தன் ரசிகர்களை சந்தித்து அரசியலில் ஈடுபடுவது குறித்து பேசினார். ரஜினியின் பேச்சை தொடர்ந்து, அவர் தனியாக கட்சி தொடங்குவாரா?, வேறு கட்சிகளுடன் சேருவாரா? என பல்வேறு கருத்துக்கள் எழுந்து வந்தன.

இந்நிலையில் .ஏ.எஸ் அதிகாரி சகாயம் அவர்கள் ரஜினிக்கு ஆதரவளித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இதுகுறித்து நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சகாயம், சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி உண்மையல்ல. நேர்மையான தமிழ் சமூகத்தை உருவாக்க செயல்பட்டு வருகின்றேன் என அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி