ஆப்நகரம்

சாரிடான் உட்பட 3 மருந்துகளை விற்க உச்சநீதிமன்றம் அனுமதி!

நாடு முழுவதும் 328 மருந்துகள் விற்பனையை தடை செய்யப்பட்ட நிலையில், சாரிடான் உட்பட 3 மருந்துகள் மட்டும் விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Samayam Tamil 17 Sep 2018, 5:32 pm
நாடு முழுவதும் 328 மருந்துகள் விற்பனையை தடை செய்யப்பட்ட நிலையில், சாரிடான் உட்பட 3 மருந்துகள் மட்டும் விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
Samayam Tamil saridon


2016ம் ஆண்டு மருத்துவ தொழில்நுட்ப ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் 349 மருந்துகள் உட்கொள்ள தகுதி அற்றவை என்று தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம், சாரிடான், தோல் பிரச்சனைகளுக்கான பாண்டோர்ம், லுபிடிக்ளாக்ஸ், உள்ளிட்ட 328 மருந்து, மாத்திரைகளுக்கு தடை விதித்தது. அதே சமயம் டீகோல்ட் டோட்டல், கோரக்ஸ் உள்ளிட்ட மருந்துகள் தகுதியானவை என்றும் உறுதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த வாரம் தடைவிதிக்கப்பட்ட 328 மருந்து பொருட்களில் டார்ட் வலி நிவாரணி, சாரிடான் மற்றும் பிரிட்டான் ஆகிய மூன்று மருந்துகளை மட்டும் தொடர்ந்து விற்பனை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தற்போது அனுமதி வழங்கியுள்ளது.

அடுத்த செய்தி