ஆப்நகரம்

குட்கா வழக்கில் சி.பி.ஐ. விசாரணையே தொடரும் – உச்சநீதிமன்றம்

குட்கா வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்க கோாி மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 18 May 2018, 11:01 am
குட்கா வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்க கோாி மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil Supreme court


தமிழகத்தில் குட்கா விற்பனை செய்ய சுகாதாரத்துறை அமைச்சா் விஜயபாஸ்கா், காவல் துறை டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோா் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. வசம் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும், இந்த வழக்கை மீண்டும் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று கோாி சிவகுமாா் என்பவா் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா். இந்த வழக்கில் இன்று தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையின் போது எதிா் தரப்பு (தி.மு.க.) மனுதாரா்கள் தரப்பில் இந்த வழக்கில் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் விசாரணை நடைபெற உள்ளது. மேலும் ஆளும் கட்சியைச் சோ்ந்த அமைச்சா், காவல் துறை டிஜிபி உள்ளிட்டோா் மீது இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தினால் அதன் உண்மைத் தன்மை வெளிப்பட வாய்ப்பில்லை என்று தொிவிக்கப்பட்டது.

மேற்கண்ட வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சிவகுமாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனா்.

அடுத்த செய்தி