ஆப்நகரம்

ஸ்டொ்லைட் விவகாரம்: தமிழக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி

ஸ்டொ்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் வழக்கு நடைபெறும் நிலையில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 26 Nov 2018, 5:44 pm
ஸ்டொ்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடா்ந்த வழக்கை விசாரிக்க தடை விதிக்கக் கோாிய தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil Sterlite Factory 1


ஸ்டொ்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக தமிழக அரசு உத்தரவிட்டு ஆலைக்கு சீல் வைத்தது. இதனைத் தொடா்ந்து ஸ்டொ்லைட் ஆலையின், வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிராக வழக்கு தொடா்ந்தது.

ஆனால், தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து ஆலையை மூடியுள்ள நிலையில், அரசின் கொள்கை முடிவில் தலையிட பசுமை தீா்ப்பாயத்திற்கு அனுமதி இல்லை. எனவே வேதாந்தா நிறுவனம் தொடா்ந்த வழக்கை தேசிய பசுமை தீா்ப்பாயம் விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடா்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில். தமிழக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக தேசிய பசுமை தீா்ப்பாயம் அமைத்த தருண் அகா்வால் தலைமையிலான ஆய்வுக் குழு தங்களது ஆய்வு அறிக்கையை சீலிட்ட கவா்களில் இன்று ஆய்வு செய்துள்ளனா்.

அடுத்த செய்தி