ஆப்நகரம்

ஜெயலலிதா மகள் என அறிவிக்க அம்ருதா தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றம் தள்ளுபடி!!

ஜெயலலிதாவின் மகள் என தன்னை அறிவிக்கக் கோரி அம்ருதா தொடரந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

TNN 27 Nov 2017, 1:16 pm
ஜெயலலிதாவின் மகள் என தன்னை அறிவிக்கக் கோரி அம்ருதா தொடரந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
Samayam Tamil supreme court dismissed the case of amrutha alias manjula case
ஜெயலலிதா மகள் என அறிவிக்க அம்ருதா தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றம் தள்ளுபடி!!


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.

அவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த சந்தேகத்தால் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது . தற்போது இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக அறிவிக்க கூடாது எனவும் , அது ஜெ.தீபாவின் தம்பி சொத்து என்று தீபா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதையடுத்து தமிழக அரசு தீபாவின் மனுவை பரிசீலனை செய்யும் என தெரிவித்ததால், வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அடுத்த வாரம் வரவுள்ள நிலையில், பெங்களூருவை சேர்ந்த மஞ்சுளா என்ற அம்ருதா தன்னை ஜெயலலிதாவின் மகள் என அறிவிக்கக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

அத்துடன் தனக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்யவும் அவர் வழக்கில் கேட்டுக்கொண்டுள்ளார். டி.என்.ஏ பரிசோதனைக்காக மறைந்த ஜெயலலிதாவின் உடலையும் மெரினாவில் இருந்து தோண்டி எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கக்கூடாது என்பதால் இத்தனை வருடங்கள் உண்மையை கூறவில்லை என்றும், தனது வளர்ப்புத் தந்தை கடந்த மார்ச் மாதம் இறந்துவிட்டதால் தற்போது உண்மையை கூறுவதாகவும் வழக்கில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜெயலலிதாவுக்கு இறுதிச்சடங்கை வைஷ்ணவ பிராமண முறைப்படி செய்ய வேண்டும் என்று அம்ருதா கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று அம்ருதாவின் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் , அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் சசிகலா தரப்பிலிருந்து தனக்கு மிரட்டல் வருவதாக அம்ருதா கூறியிருப்பது மேலும் சர்ச்சையை அதிகரித்துள்ளது.

அடுத்த செய்தி