ஆப்நகரம்

கெயில் திட்டம்: விவசாயிகள் மறுசீராய்வு மனு உச்சநீதிமன்றம் தள்ளுபடி

தமிழகத்தில் கெயில் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை இன்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

TOI Contributor 28 Apr 2016, 4:07 pm
தமிழகத்தில் கெயில் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை இன்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Samayam Tamil supreme court dismisses revision petition filed by farmers on allowing gail pipelines
கெயில் திட்டம்: விவசாயிகள் மறுசீராய்வு மனு உச்சநீதிமன்றம் தள்ளுபடி


தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் விவசாய விளை நிலங்கள் வழியாக குழாய் மூலம் திரவ எரிவாயுவை கொண்டு செல்ல கெயில் நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து இருந்தது.

இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக அரசும் எதிர்ப்பு தெரிவித்தது. மற்ற மாநிலங்களில் இருப்பதைப் போன்று தேசிய நெடுஞ்சாலை ஓரமாக குழாய்களை பதிக்க வேண்டும் கேட்டுக் கொண்டது.

இந்நிலையில், கெயில் திட்டத்திற்கு அனுமதி அளித்து வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, தே.மு.தி.க. மற்றும் விவசாயிகள் தரப்பில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இதில் ஏற்கனவே, தமிழக அரசு மற்றும் தே.மு.தி.க.வின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில், விவசாயிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை இன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கெயில் நிறுவனத்திற்கு அனுமதி அளித்து வழங்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்வதற்கு முகாந்திரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.

அடுத்த செய்தி