ஆப்நகரம்

அப்பாடா, நிம்மதி பெருமூச்சு விட்ட ராஜேந்திர பாலாஜி

சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவால் ராஜேந்திர பாலாஜி ரிலாக்ஸ் மூடுக்கு சென்றுள்ளார்.

Samayam Tamil 21 Sep 2021, 7:26 am
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 2011 -13 ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் மகேந்திரன் நீதிமன்றத்தை நாடினார்.
Samayam Tamil KT rajendra balaji


இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநராயணன், ஹேமலதா ஆகியோர் இருவேறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். அதாவது ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என்று சங்கரநாராயணன் தீர்ப்பளிக்க, இவ் விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து எந்த பயனும் இல்லை என ஹேமலதா தீர்ப்பளித்தார்.

இதனால் வழக்கு தலைமை நீதிபதியால் மூன்றாவது நீதிபதியான நிர்மல்குமாரிடம் மாற்றப்பட்டது. மூன்றாவது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தை நாடினார்.
சசிகலாவை ரகசியமாக சந்தித்த அதிமுக முக்கிய புள்ளிகள் யார் யார்?
இதற்கிடையே இந்த வழக்கு மூன்றாவது நீதிபதியிடம் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, "ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு மீறி 73 சதவீதம் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்வதில் எந்த தடையும் இல்லை" என்று தெரிவித்தார்.

அப்போது ராஜேந்திரபாலாஜி தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் மூன்றாவது நீதிபதியிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம் அதுவரை இந்த வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் நேற்று செப்டம்பர் 20ஆம் தேதி ராஜேந்திர பாலாஜி தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது
அமைச்சரவையில் அதிரடி மாற்றம்? ஸ்டாலின் ஆடும் மங்காத்தா!அப்போது ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிபதி நிர்மல் குமார் விசாரித்து தீர்ப்பு சொல்வதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதுதொடர்பாக தமிழக அரசின் பதிலையும் கேட்டு நோட்டீஸ் அளித்துள்ளது உச்சநீதிமன்றம்.

உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பது ராஜேந்திர பாலாஜிக்கு நிம்மதியளித்துள்ளது. முன்னதாக ராஜேந்திர பாலாஜி டெல்லி சென்றுவந்தது குறித்து பல்வேறு யூகங்கள் கிளம்பின. பாஜகவில் இணைய ராஜேந்திர பாலாஜி முகாமிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் வழக்குக்காக டெல்லியில் வழக்கறிஞரை சந்திக்க சென்றதாக அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி