ஆப்நகரம்

தமிழக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி: உச்சநீதிமன்றம் தடை

ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யும் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.

TNN 3 Jul 2017, 12:23 pm
டெல்லி: ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யும் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
Samayam Tamil supreme court stays the order for loan waiver to tn farmers
தமிழக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி: உச்சநீதிமன்றம் தடை


தமிழக விவசாயிகள் வறட்சியால் ஏற்பட்ட நஷ்டத்திலிருந்து மீண்டு வர விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஐயாக்கண்ணு தாக்கல் செய்த இந்த மனு விசாரித்த உயர்நீதிமன்றம், 5 ஏக்கருக்குக்கு அதிகமாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடனை தமிழக அரசு முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது.



இந்த உத்தரவின் மீது தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தமிழக அரசின் இந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. இப்போது, சென்னை உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு இடைக்கால தடைவிதிப்பதாக உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி கோரியது குறித்து ஐயாக்கண்ணுவிடம் விளக்கம் கேட்டுள்ளது.

அடுத்த செய்தி