ஆப்நகரம்

செந்தில் பாலாஜி: வேலைவாங்கி தருவதாக பண மோசடி? உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (மே 16) தீர்ப்பு வழங்கியுள்ளது.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 16 May 2023, 11:13 am
செந்தில் பாலாஜி அதிமுக அரசில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது வேலைவாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதில் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர், ஓட்டுநர் உள்ளிட்டவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
Samayam Tamil senthil balaji


புகார் அளித்தவர்கள் செந்தில் பாலாஜியுடன் சமரசமாக போய்விட்டதாக கூறி சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது உச்ச நீதிமன்றம், சமரசமாக போனார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மீண்டும் விசாரணையை நடத்துங்கள், புதிதாக வழக்கு தொடருங்கள் என்று தீர்ப்பு வழங்கியது.

இந்த உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி விசாரணையை நடத்தும் சிபிசிஐடிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

முதல்வர் ஸ்டாலினுக்கு சென்ற ரிப்போர்ட்: டெண்டர் விவகாரம் - களத்தில் இறங்கி அதிரடி!

மற்றொரு புறம் முறைகேடாக பணம் பெற்ற புகார் இருப்பதால் நாங்களும் விசாரணை நடத்த வேண்டும், அதற்கு அனுமதியளியுங்கள் என்று அமலாக்கத்துறையும் மனு தாக்கல் செய்தது.

இந்த இரு மனுக்கள் மீதான விசாரணையும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ராமசுப்பிரமணியன் தலைமையிலான அமர்வில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பு விசாரணைக்குழு அமைத்து செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கின் விசாரணையை முதலில் இருந்தே தொடர வேண்டும். அதில் ஏதேனும் உத்தரவுகள் தேவைப்பட்டால் நீதிமன்றத்தை அணுகலாம் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் முதலில் இருந்து இந்த வழக்கின் விசாரணை தொடங்கும்.

மற்றொரு புறம் இந்த வழக்கை விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கேட்டதை உச்ச நீதிமன்றம் இன்று (மே 16)தள்ளுபடி செய்துள்ளது.

துர்கா ஸ்டாலின் யோசனை தான் எல்லாம்.. மீண்டும் வாயைக் கொடுத்து மாட்டிய அமைச்சர்!

இந்த தீர்ப்பை பொறுத்தவரை அமலாக்கத்துறை விசாரணை இல்லை என்பது செந்தில் பாலாஜிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. அதே சமயம் மீண்டும் முதலில் இருந்து விசாரணை தொடங்குவதால் அவருக்கு இந்த வழக்கிலிருந்து நெருக்கடி முடிவுக்கு வரவில்லை.

தற்போது உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்பது அவருக்கு தற்போது இருக்கும் ஆறுதல் எனலாம்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி