ஆப்நகரம்

வாரியம் அமைப்பதில் உச்சநீதிமன்றம் ஏமாற்றவிட்டது: ஸ்டாலின்

காவிரி விவகாரத்தில் மே.3ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் கால அவகாசத்தை கொடுத்திருப்பது ஏமாற்றமளிக்கிறது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 9 Apr 2018, 9:00 pm
காவிரி விவகாரத்தில் மே.3ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் கால அவகாசத்தை கொடுத்திருப்பது ஏமாற்றமளிக்கிறது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 72


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த 6 வார கெடுமுடிந்த பின் மத்திய அரசு மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டிருக்கிறது. மத்திய அரசின் அலட்சப் போக்கைக் கண்டித்து தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்குகளை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது. அப்போது மத்திய அரசு உச்சநீதிமன்ற உத்தரவில் அளித்த கால அவகாசத்தில் வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்ததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பின், மே 3ஆம் தேதிக்குள் காவிரி நதி நீர் பங்கீட்டுக்கான வரைவுத் திட்டத்தைத் தாக்கல் செய்யவும் பின் அது பற்றி தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் கருத்தைப் பெறவும் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு தனது கடமையிலிருந்து நழுவ முடியாது என்றும் கூறியுள்ளது.

இந்நிலையில், தஞ்சையில் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை உச்ச நீதிமன்றம் வெளிப்படையாகவே கண்டித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், 3ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியிருப்பது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம் மத்திய பாஜக அரசு கடைசி நேரத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று அவகாசம் கேட்டதுதான்" என்றார்.

"ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியத்தில் அடங்கியதுதான் என்று உச்ச நீதிமன்றம் அறுதியிட்டுக் கூறியுள்ளதால் தமிழக மக்கள் உச்ச நீதிமன்றத்தை மட்டுமே நம்ப வேண்டிய நிலை வந்திருக்கிறது” என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி