ஆப்நகரம்

பெண் கொலை வழக்கில் மாஜி கவுன்சிலரின் ஆயுளை உறுதி செய்தது உயர்நீதிமன்ற கிளை!

பெண் கொலை வழக்கில், கீழமை நீதிமன்றம் மாஜி கவுன்சிலருக்கு வழங்கிய ஆயுள் தண்டனையை உயர்நீதிமன்ற மதுரை கிளை உறுதி செய்தது.

Samayam Tamil 15 May 2019, 11:15 am
பெண் கொலை வழக்கில், கீழமை நீதிமன்றம் மாஜி கவுன்சிலருக்கு வழங்கிய ஆயுள் தண்டனையை உயர்நீதிமன்ற மதுரை கிளை உறுதி செய்தது.
Samayam Tamil life


தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்தவர் இந்திரஜித். மாஜி கவுன்சிலர். இவருக்கும், கும்பகோணத்தை சேர்ந்த காசிநாதன் மனைவி சங்கீதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. சங்கீதாவை, தன்னுடன் சேர்ந்து வாழும்படி இந்திரஜித் கூறியுள்ளார். இதற்கு சங்கீதா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இந்திரஜித், 2015ம் ஆண்டு சங்கீதா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார்.

படுகாயமடைந்த சங்கீதா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். கும்பகோணம் போலீசார் வழக்குப்பதிந்து, இந்திரஜித்தை கைது செய்தனர். இவ்வழக்கை விசாரித்த தஞ்சாவூர் 2வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம், கடந்த 2016ல் இந்திரஜித்திற்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து இந்திரஜித், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அப்பீல் செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர், இந்திரஜித்தின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து, கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டனர்.

அடுத்த செய்தி