ஆப்நகரம்

சத்யராஜ் எதிர்ப்பு பின்னணியில் அரசியல் உள்ளது: எஸ்.வி.சேகர்!

சத்யராஜுக்கு எதிராக கர்நாடகத்தில் பிரச்சனை கிளம்பியுள்ளதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

TOI Contributor 21 Apr 2017, 3:11 pm
சென்னை: சத்யராஜுக்கு எதிராக கர்நாடகத்தில் பிரச்சனை கிளம்பியுள்ளதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil sv shekar slams kannadigas for pressurize sathyaraj to tender apology
சத்யராஜ் எதிர்ப்பு பின்னணியில் அரசியல் உள்ளது: எஸ்.வி.சேகர்!


காவிரி விவகாரத்தில் கன்னடர்கள் பற்றி பேசியதற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், சத்யராஜ் இன்று அதற்காக மன்னிப்பு கேட்டார்.

இதுகுறித்து பாஜக.,வை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் கூறுகையில்,’
சத்யராஜ் பெருந்தன்மையானவர். காவிரியில் இருந்து கர்நாடகா அரசு தண்ணீர் திறக்கவில்லை என்றால், விடவில்லை என்று தான் நாம் சொல்ல முடியும்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை கர்நாடகா அரசு மதிக்கவில்லை என்றால் மதிக்கவில்லை என்று தான் சொல்ல முடியும். அரசியல்வாதிகள் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை கருத்துக்களை மாற்றிக்கொள்கிறார்கள். ஆனால் நடிகர் என்பதால் சத்யராஜை குறி வைக்கிறார்கள்.

சுமார் 9 வருஷத்துக்கு முன் சத்யராஜ் பேசியதற்ஜ்ய் பாகுபலி ரிலீஸ் நேரத்தில் எதிர்ப்பு தெரிவிப்பது, முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் மட்டுமே.

தமிழகத்தில் இருந்து மணல் செல்லாவிட்டால் கர்நாடகாவில் கட்டுமான தொழில் ஸ்தம்பித்துவிடும். அதே போல தமிழ் ஐடி ஊழியர்கள் அங்கிருந்து கிளம்பினால் என்னவாகும்? இதையெல்லாம் கர்நாடகா யோசிக்க வேண்டும்.

சத்யராஜ் துவக்கம் முதல் தன்னை தமிழ் நடிகர் என அடையாளம் காட்டிக்கொண்டவர். அதனால் அவரை எதிர்க்கிறார்கள். வேறு சிலர் கர்நாடகா சென்றால் தன்னை கன்னடன் எனவும், ஆந்திரா சென்றால் தெலுங்கன் எனவும் பேசி தப்பிவிடுவார்கள். என்றார்.

SV.Shekar Slams Kannadigas for pressurize Sathyaraj to tender apology.

அடுத்த செய்தி