ஆப்நகரம்

பெண்களின் பாதுகாப்பிற்காக ”சுவாதி ஆப்”..!!

ரயிலில் பயணிக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ’சுவாதி ஆப்’ என்ற பெயரில் மொபைல் அப்ளிகேஷன் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

TNN 14 Jul 2016, 11:39 am
ரயிலில் பயணிக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ’சுவாதி ஆப்’ என்ற பெயரில் மொபைல் அப்ளிகேஷன் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
Samayam Tamil swathy app to be introduced for women safety
பெண்களின் பாதுகாப்பிற்காக ”சுவாதி ஆப்”..!!


சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிறகு,ரயில்களில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது.இதனை கருத்தில் கொண்டு ரயில்களில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ‘சுவாதி ஆப்’ என்ற மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை ரயில்வே பாதுகாப்பு படை அறிமுகப்படுத்த உள்ளது.

ரயில்வே பாதுகாப்பு படையுடன் இணைந்து கொலையான இளம்பெண் சுவாதி பணிபுரிந்த இன்போசிஸ் நிறுவனமும் இந்த ஆப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.ரயிலில் பயணிக்கும் பெண்கள்,தங்களுக்கு ஆபத்து நிகழும் நேரத்தில் இந்த அப்ளிகேஷனில் உள்ள sos பட்டனை அழுத்தினால்,உடனடியாக அந்த தகவல் கட்டுப்பாட்டு அறைக்கும்,அருகிலுள்ள ரயில்வே பாதுகாப்பு படையினருக்கும் கிடைக்குமாறு இந்த அப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டு வருகிறது.இதனால் ஒரே நேரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் பல ரயில்வே பாதுகாப்பு படை குழுக்களுக்கும் இந்த தகவல் செல்வதால்,உதவி தேவைப்படும் ரயில்,அது அடுத்ததாக நிற்கப்போகும் ரயில் நிலையம் ஆகியவற்றை ஆராய்ந்து உடனடியாக பாதுகாப்பு படையினர் அங்கு செல்வதற்கு இது உதவும் என கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் கொடூரமாக கற்பழித்து கொல்லப்பட்ட நிர்பயா பெயரில்,பெண்கள் பாதுகாப்பிற்காக ஒரு மொபைல் அப்ளிகேஷன் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி