ஆப்நகரம்

பொன் மாணிக்கவேலுக்குப் பிறகு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி இவர்தான்...? யார் இவர் ?

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி பொன்மாணிக்கவேலின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து, அடுத்த சிலைக்கடத்தல் பிரிவின் சிறப்பு அதிகாரியாக ஐஜி அன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.​​

Samayam Tamil 3 Dec 2019, 4:07 pm
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி பொன்மாணிக்கவேலின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து, சிலைக்கடத்தல் பிரிவின் அடுத்த சிறப்பு அதிகாரியாக ஐஜி அன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil t.s.anbu


சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில், தனது பணி ஓய்வுக்காலத்திற்குப் பிறகான ஓராண்டு கால பதவி நீட்டிப்பும் முடிந்ததை அடுத்து அடுத்த இந்த பிரிவிக்கு அடுத்த திகாரி நியமிக்கப்படுவார் என்று தகவ்ல்கள் வெளியாகின.

இந்நிலையில், மீண்டும் பொன் மாணிக்கவேலுக்கு பதவிக்காலத்தை நீட்டிக்கக் கோரிய பொன்மாணிக்கவேலின் மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

மேலும், ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இனி பொன் மாணிக்கவேல் விட்ட இடத்திலிருந்து ஐஜி அன்பு இதைத் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



யார் இந்த அன்பு?
ஐஜி அன்பு தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் ஐஜியாக பொறுப்பு வகிக்கிறார். அண்மையில் 2019 ஜூலை மாதம் பதவி உயர்வு பெற்று சென்னையில் ஐஜியாக பணியில் அமர்ந்தவர். அதற்கு முன் சேலம் மாவட்ட ஆணையராக பணி புரிந்தார்.

2001 ஆம் ஆண்டு காவல்துறையில் பணியைத் தொடங்கிய டி.எஸ்.அன்பு தற்போது சென்னைப் பெருநகர காவல்துறையின் ஐஜி (நிர்வாகம்) யாக பதவி உயர்வு செய்யப்பட்டார்.

இப்போது சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் ஐஜியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

அடுத்த செய்தி