ஆப்நகரம்

எடப்பாடி வீட்டிலும் பன்னீர் வீட்டிலும் ஏன் சோதனை செய்யவில்லை -டிடிவி தினகரன் ஆவேசம்!

ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் தோட்டத்தில் நடந்த வருமானவரிச் சோதனை குறித்து டிடிவி தினகரன் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

TNN 18 Nov 2017, 10:56 am
ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் தோட்டத்தில் நடந்த வருமானவரிச் சோதனை குறித்து டிடிவி தினகரன் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
Samayam Tamil t t v dhinakaran asks why it raid not done in edappadi palanisamy and panneerselvam house
எடப்பாடி வீட்டிலும் பன்னீர் வீட்டிலும் ஏன் சோதனை செய்யவில்லை -டிடிவி தினகரன் ஆவேசம்!


தூத்துகுடியில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியதாவது’’ ஜெயலலிதா விட்டில் பாழாய்போன லேப்டாப்பைத்தான் வருமானவரித்துறை எடுத்து சென்றிருக்கிறது. ஜெயலலிதா அம்மா உடல்நிலை மோசமானபோது ஏன் மோடி வந்து பார்க்கவில்லை . ஆனால் கருணாநிதி அவர்களை ஏன் பார்க்க வேண்டும் .

அதேபோல் சோதனை நடத்த வேண்டும் என்றால் எங்களுடன் இருந்த எடப்பாடி பழனிச்சாமி , பன்னீர் செல்வம் வீட்டிலும் சோதனை செய்ய வேண்டும் . எடப்பாடியும், பன்னீர் செல்வமும் அடுத்தவர்களுக்கு என்ன நடந்தால் என்ன, தான் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்து கையை வாயை மற்றும் காலையும் பொத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

என்ன சோதனை நடந்தாலும் எங்களை எதுவும் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார். இதற்கு முன்பு டிடிவி நேற்று இரவு பதிவிட்ட டுவிட்டில் கூறியிருந்ததாவது, "போயஸ்கார்டனில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதற்கு காரணம் எதுவாக இருந்தாலும் அது, அம்மாவின் ஆன்மாவுக்கு செய்யப்படும் துரோகம். இந்த துரோகத்தின் பின்னனியில் எடப்பாடியும் பன்னீர்செல்வமும்தான் இருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது போயஸ் இல்லத்தை யாராலும் நெருங்க முடியாத நிலை இருந்தது ஆனால் தற்போது இந்த வீடு, பல சர்ச்சைகளால் சிக்கிக்கொண்டிருக்கிறது.

அடுத்த செய்தி