ஆப்நகரம்

நீட் தேர்வுக்கு பயிற்சி எடுத்துக்கொள்வது மாணவர்கள் கடமை - அமைச்சர் அட்வைஸ்

தமிழகக்தில் நீட் தேர்வுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அமைச்சர் மா. சுப்ரமணியன் பேசியுள்ளார்.

Samayam Tamil 18 Jun 2021, 6:06 pm
தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என்றும் மாநிலத்தில் இம்முறைக்கு விலக்களிக்க கோரியும் மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
Samayam Tamil கோப்புப்படம்


மேலும், தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்தும், பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் அவற்றை சரி செய்யும் வகையில், இம்முறைக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறத்தக்க வகையிலான மாணவர் சேர்க்கை முறைகளை வகுப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் தமிழக அரசு உயர்நிலைக் குழு ஒன்றை அமைத்துள்ளது.

இதனிடையே தமிழக அரசு பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கும் நடைமுறை பின்பற்றப்படும் என அரசு கூறியதை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் விமர்சித்தார்.

அது தொடர்பாக விளக்கமளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அதிமுக கடும் முயற்சிகள் எதுவும் எடுக்கவில்லை.

ஸ்டாலின் மனைவியின் முழுப் பெயர் இதுதானா?

தற்போது நீட் தேர்வு பாதிப்புகளை குறித்து ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்ய ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆணையம் அறிக்கையை தாக்கல் செய்ததும் மேற்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை நீட் தேர்வு முறை நடைமுறையில்தான் உள்ளது. அதற்கான பயிற்சிகளை எடுத்துக்கொள்வது மாணவர்களின் கடைமை'' என இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி