ஆப்நகரம்

மதுரையில் தமிழன்னை சிலையுடன் அருங்காட்சியம்: மாஃபா

மதுரை தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் ரூ.50 கோடி செலவில் தமிழன்னை சிலையுடன் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

Samayam Tamil 30 Jan 2018, 2:25 pm
மதுரை தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் ரூ.50 கோடி செலவில் தமிழன்னை சிலையுடன் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.
Samayam Tamil tamil annai statue to be place in madurai tamil museum
மதுரையில் தமிழன்னை சிலையுடன் அருங்காட்சியம்: மாஃபா

கடந்த 2013ஆம் ஆண்டு 110 விதியின் கீழ் பேசிய அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மதுரையில் பிரம்மாண்டமான தமிழன்னை சிலை நிறுவப்படும் என்று அறிவித்தார். ஆனால், அந்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டது.

இந்நிலையில், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், புகழ்பெற்ற ரோம் அருங்காட்சியகம் போல மதுரையில் உலக தமிழ்ச் சங்கத்தின் கட்டிடம் அருகே அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கே தமிழன்னை சிலை நிறுவப்படும்.

மீனாட்சியம்மன் கோவில் கோபுரத்தை விட எந்த சிலைகளோ கட்டிடமோ இருக்கக் கூடாது. இதனைக் கருத்தில் கொண்டு 50 கோடி ரூபாய்க்கு அருங்காட்சியகம் மற்றும் தமிழன்னை சிலை உருவாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி