ஆப்நகரம்

ஜெ., சமாதியில் திரைப்பட துறையினர் அஞ்சலி!

தமிழ் திரைப்படத்துறையினர் ஜெயலலிதாவின் சமாதிக்கு ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

Samayam Tamil 23 Dec 2016, 7:37 pm
சென்னை : தமிழ் திரைப்படத்துறையினர் ஜெயலலிதாவின் சமாதிக்கு ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
Samayam Tamil tamil cinema people tribute jayalalitha
ஜெ., சமாதியில் திரைப்பட துறையினர் அஞ்சலி!


தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து அவருடைய உடலானது எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. சென்னை மெரினா கடற்கரை நல்லடக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சமாதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.

இந்தநிலையில் இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு தலைமையில் திரைப்பட தயாரிப்பாளர்கள், சின்னத்திரை நடிகர்கள் , நடிகைகள் உள்ளிட்டோர் இன்று பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக சென்று ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

அடுத்த செய்தி