ஆப்நகரம்

மார்ச் 16ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்பு அனைத்தும் ரத்து!

கியூப் உள்ளிட்ட டிஜிட்டல் சேவை பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படாததால் மார்ச் 16ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 9 Mar 2018, 9:53 pm
கியூப் உள்ளிட்ட டிஜிட்டல் சேவை பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படாததால் மார்ச் 16ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil tamil movie shooting cancelled from march 16 says actor vishal
மார்ச் 16ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்பு அனைத்தும் ரத்து!

க்யூப், யூஎஃப்ஒ டிஜிட்டல் நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதாக திரைப்பட தயாரப்பாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தொடர்ந்து இந்த கட்டணத்தை குறைக்கும் வரை புதிய திரைப்படங்களை வெளியிடாமல் கடந்த 1ம் தேதி முதல் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கியூப் உள்ளிட்ட மற்ற பிரச்னைகளுக்கும் சரியான தீர்வு ஏற்படாததால் மார்ச் 16 தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று பெப்சி அமைப்பின் ஒப்புதலோடு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே புதிய திரைப்படங்கள் ரிலீஸ் செய்யாத காரணத்தினால், திரையரங்கு உரிமையாளர்கள் பழைய திரைப்படங்களையே மீண்டும் மீண்டும் திரையிட்டு வருகின்றனர். இதனால், திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மேலும், தமிழக அரசு ஏற்கனவே ஒப்புக்கொண்டதன்படி ஆணை பிறப்பிக்காவிட்டால், ஏப்ரல் 1ம் தேதி முதல் திரையரங்குகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்படும் என்று திரைப்பட உரிமையாளர்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது,

அடுத்த செய்தி