ஆப்நகரம்

இன்று வெளியாகும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

தமிழக பாடத் திட்டத்தில் மாணவர்கள் எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.

Samayam Tamil 16 May 2018, 8:05 am
சென்னை: தமிழக பாடத் திட்டத்தில் மாணவர்கள் எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.
Samayam Tamil 8


மறுகூட்டலுக்கு நாளை முதல் இரண்டு நாட்கள் விண்ணப்பிக்கலாம்.தமிழக பாடத் திட்டத்தில் 8.66 லட்சம் மாணவ, மாணவியர் பிளஸ் 2 தேர்வில் பங்கேற்றனர்.

இந்த தேர்வின் முடிவுகள் குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியாகும். இவற்றை, www.tnresults.nic.in,www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in. என்ற இணையதள முகவரிகளில் பார்க்கலாம்.

தேர்வு எழுதியோர், தங்களின் பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டு பதிவு செய்து மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள அலைபேசி எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., ஆக தேர்வு முடிவு வெளியாகும்.

விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், பள்ளிகள் வழியாகவும் தனித் தேர்வர்கள் தேர்வு மையங்கள் வழியாகவும் நாளை முதல், மே, 19 வரை விண்ணப்பிக்கலாம்.

இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து, தேர்வு எழுதாதவர்கள் மற்றும் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, ஜூனில் சிறப்பு துணைத்தேர்வு நடக்கும்.

தவிர, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், மாணவர்கள், தேர்வர்கள் நேரடியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu 12th exam results announced today

அடுத்த செய்தி