ஆப்நகரம்

ராஜ்யசபா எம்.பி., தேர்தல்: 6 பேர் போட்டியின்றி தேர்வு!

தமிழகம் சார்பாக, மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

TNN 31 May 2016, 4:36 pm
தமிழகம் சார்பாக, மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil tamil nadu 6 rajyasabha members elected as unopposed
ராஜ்யசபா எம்.பி., தேர்தல்: 6 பேர் போட்டியின்றி தேர்வு!


திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்.பி.,க்களின் பதவிக்காலம் ஜூன் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. 15வது சட்டப்பேரவையில் திமுக, அதிமுக.,வுக்கே பெரும்பான்மை உள்ளதால், இவ்விரு கட்சிகள் மட்டுமே மாநிலங்களவை எம்.பி., தேர்தலில் போட்டியிட முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதையடுத்து, புதிய எம்.பி., பதவிக்கான வேட்பாளர்களை, திமுக மற்றும் அதிமுக அறிவித்தன. இதன்படி, திமுக., சார்பாக ஆர்.எஸ். பாரதி மற்றும் டிகேஎஸ்., இளங்கோவன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதிமுக., சார்பாக வைத்தியலிங்கம், விஜயகுமார், நவநீதகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், போட்டி ஏதும் இல்லாததால், இவர்கள் 6 பேரும் போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விரைவில் இவர்கள் பதவியேற்கக்கூடும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி