ஆப்நகரம்

மற்ற மாநிலங்களை விட முன்னெச்சரிக்கையாக செயல்படும் தமிழகம் - முதல்வர் பழனிசாமி!

இந்தியாவிலேயே தமிழகம்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ உபகரணங்களை வாங்கி வைத்துள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 16 Apr 2020, 3:52 pm
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் புதிதாக 25 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகம்தான் முன்னெச்சரிக்கையாக மருத்துவ உபகரணங்களை வாங்கி வைத்துள்ளது. மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி ஆட்சியர்களிடம் கேட்டறிந்தேன். காய்கறிகள் விலை கட்டுப்பாட்டில் தான் உள்ளது. விலை உயர்ந்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் கூறுவது தவறு.
Samayam Tamil எடப்பாடி பழனிசாமி


துவரம் பருப்பு 500 மெட்ரிக் டன், மிளகு, கடுகு, சீரகம், வெந்தயம் 100 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு விலை ஏற்றம் தடுக்கப்பட்டுள்ளது. கொரோனோ தடுப்பு தொடர்பான அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் தடையாக உள்ளன. புயல், சுனாமி வந்தாலும் மு.க.ஸ்டாலின் குறை சொல்லிக்கொண்டே தான் இருப்பார்.

மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு தேவையானவற்றை பெற திமுக எம்.பிக்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 1,267 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் குணமடைந்த நபர்களின் எண்ணிக்கை 180ஆக உள்ளது.

திருச்சி: ஒரே நாளில் வீடு திரும்பிய 32 பேர்!

இதுவரை வைரஸ் தொற்று காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் நிலைமை இன்னும் கட்டுக்குள் வரும் என நம்புகிறோம். வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய பணக்காரர்கள்தான் கொரோனாவை இறக்குமதி செய்துள்ளனர்.

ஏழைகளுக்கு எந்த நோயும் இல்லை. அரசால் அங்கீகரிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் கொரோனாவால் உயிரிழந்தால் ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும். கொரோனா தொற்றால் பத்திரிகையாளர்கள் பாதித்தால் முழு செலவை அரசே ஏற்கும் என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி