ஆப்நகரம்

குற்ற வழக்கு: வழக்கறிஞர்கள் பணி செய்ய தடை - பார் கவுன்சில் உத்தரவு!

குற்ற வழக்குகளில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் பணிசெய்ய தடை விதித்து பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது

Authored bySM Prabu | Samayam Tamil 6 Dec 2022, 3:43 pm
குற்ற வழக்குகளில் தொடர்புடைய இரண்டு பெண்கள் உள்ளிட்ட ஒன்பது வழக்கறிஞர்கள் பணிசெய்ய தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Samayam Tamil தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில்
தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில்


தனது கட்சிக்காரரிடம் பெருந்தொகையை கையாடல் செய்ததாக கைது செய்யப்பட்ட சென்னை செங்குன்றத்தை சேர்ந்த வழக்கறிஞர் வி.நந்தகோபாலன், குழந்தை கடத்தல் வழக்கில் தொடர்புடைய திருச்சியை சேர்ந்த ஏ.பிரபு, தீவிர குற்றச்சாட்டின் கீழ் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான நாகர்கோவிலை சேர்ந்த ஆர்.ராஜா கணபதி ஆகியோர் வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒன்பது லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி பணி நியமன உத்தரவு வழங்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய கடலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.பெருமாள், உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய சென்னையைச் சேர்ந்த ஏ.ரமேஷ், பி.பொன் பாண்டியன், திருவாரூர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய பெண் வழக்கறிஞர் முத்தாட்சி ஆகியோருக்கும் வழக்கறிஞர் பணி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதி கனமழை எச்சரிக்கை: எந்தெந்த மாவட்டங்கள்? முழு விபரம் இதோ!
தாம்பரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் போக்சோ வழக்கில் தொடர்புடைய சென்னை சேர்ந்த பெண் வழக்கறிஞர் ரோஜா ராம்குமார் மற்றும் மதுரையைச் சேர்ந்த டி.அருண்பாண்டியன் ஆகிய 9 வழக்கறிஞர்கள் நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள், உள்ளிட்ட அனைத்து இடங்களில் வழக்கறிஞராக தொழில் செய்ய தடை விதிக்கப்படுவதாகவும், இவர்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை விசாரணை முடிவடையும் வரை இந்த தடை அமலில் இருக்கும் எனவும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் ராஜ்குமார் இன்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
SM Prabu
நான் மணிகண்ட பிரபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை, எழுத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பயணித்து வருகிறேன். அரசியல், நீதிமன்றம், அரசு சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். செய்திகளை தாண்டி அதன் பின்புலங்களை ஆராய்ந்து கட்டுரைகளாக தந்து வருகிறேன். பத்திரிகையாளராக சாமானிய மக்களின் குரலாக ஒலிப்பதில் எவ்வித சமரசமும் இன்றி பணியாற்றி வருகிறேன். Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக தற்போது பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி