ஆப்நகரம்

கர்நாடகாவில் இருந்து ஒரு லட்சம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் திறப்பு!

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக குடகு, ஹசன் மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது இதன்காரணமாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளி் உள்ள அணைகள் மிகவேமாக நிரம்பி வருகின்றன.

Samayam Tamil 16 Jul 2018, 10:31 am
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக குடகு, ஹசன் மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது இதன்காரணமாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளி் உள்ள அணைகள் மிகவேமாக நிரம்பி வருகின்றன.
Samayam Tamil kabini

கிருஷ்ணராஜ சாகர், கபினி அணையில் திறக்கப்படும் நீரின் அளவு இன்று காலை நிலவரப்படி, ஒரு லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணயில் இருந்து 80 ஆயிரம் கனஅடி, கபினி அணையில் இருந்து 40 ஆயிரம் கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கான நீர் வரத்து 60 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ள நிலையில், ஒகேனக்கல்லில் அருவிகளையே மூழ்கடிக்கும் நிலையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. மங்களூர் உட்பட கர்நாடகாவின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மேலும் மைசூர், மாண்டியா, சாம்ராஜ் உள்ளிட்ட பகுதிகளுக்கும் காவிரி கரையோர பகுதி மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி