ஆப்நகரம்

ஜல்லிக்கட்டு : பிரதமருக்கு முதல்வர் கடிதம்

ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என்று தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

TNN 9 Jan 2017, 2:59 pm
ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என்று தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Samayam Tamil tamil nadu chief minister o panneerselvam requests pm narendra modi to permit jallikattu
ஜல்லிக்கட்டு : பிரதமருக்கு முதல்வர் கடிதம்


தமிழரின் பாரம்பரிய போட்டியான ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் 2014-ம் ஆண்டு தடைவித்தது. இதனைதொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடியாமல் தமிழக மக்கள் திணறி வருகின்றனர்.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றது. நேற்று சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 5ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட இளைஞர்கள் தன்னெழுச்சியாக திரண்டனர். இந்தநிலையில் தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜல்லிக்கட்டு தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் பிரதமருக்கு எழுதியுள்ள கடித்ததில் "ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் . அவசர சட்டம் கொண்டுவர சுற்றுசுழல் அமைச்சகத்திற்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் . ஜல்லிக்கட்டுக்கு இடையூறாக உள்ள சட்ட விதிகளை நீக்க வேண்டும்.

அடுத்த செய்தி