ஆப்நகரம்

கனமழை, வெள்ளம்: முதல்வர் ஸ்டாலின் நடத்தும் அவசர ஆலோசனை!

தமிழ்நாட்டில் 14 மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

Samayam Tamil 4 Aug 2022, 12:24 pm
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கனமழை பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்குகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கிறது. இதனால் அணைகளில் வெளியேறும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil mk stalin


இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களின் இருப்பிடங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. எனவே பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்படுகின்றனர்.

சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் பல இடங்களில் பணிகள் நிறைவு பெறாமல் உள்ளன. கடந்த ஆண்டு பெய்த கனமழையால் சென்னை வெள்ளத்தில் தத்தளித்தது. ஆட்சிக்கு வந்து சில மாதங்களே ஆன நிலையில் மக்களின் கோபம் திமுக அரசுக்கு எதிராக கிளம்பவில்லை. ஆனால் இம்முறை கனமழை காரணமாக அதேபோன்ற நிலை ஏற்பட்டால் மக்கள் திமுக அரசு மீது அதிருப்தி கொள்ள நேரிடும். இதனாலே கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அரசின் திட்டங்கள் குறித்து மக்கள் அறிவது எப்படி? ஆய்வுக்கூட்டம் நடத்திய அமைச்சர்!
இந்நிலையில் கனமழை, வெள்ளம் காரணமாக மேற்கொள்ள வேண்டிய தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து 14 மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.

தலைமை செயலகத்தில் 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபடுகிறார். இதில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தலைமைச் செயலர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

அடுத்த செய்தி