ஆப்நகரம்

தலைமைச் செயலாளரை திடீரென அழைத்த ஆளுநர்: என்ன அறிவிப்பு வரப் போகுதோ?

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தலைமைச் செயலாளர் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

Samayam Tamil 28 Apr 2021, 3:55 pm
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறுகிறது.
Samayam Tamil lockdown


இந்நிலையில் கொரோனா பரவல், வாக்கு எண்ணிக்கை ஆகியவை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தமிழக தலைமைச் செயலாலர் ராஜீவ் ரஞ்சனை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அழைத்துள்ளார்.
தமிழகத்தில் யாருக்கு வெற்றி? லீக்காகும் வாக்குக் கணிப்பு முடிவுகள்!
தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மாலை 5 மணியளவில் ஆளுநரை சந்தித்து தகவல்களை பரிமாறிக் கொள்ளவுள்ளார். இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளனர்

ஏற்கெனவே தமிழ்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. ஞாயிறு முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. வணிக வளாகங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு பூங்கா, திரையரங்குகள், வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டுள்ளன. நகராட்சி, மாநகராட்சிகளில் சலூன்கள், அழகுநிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

தமிழகத் தேர்தலில் முந்துவது யார்? பலிக்குமா ஐ பேக் கணக்கு?

நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறைச் செயலாளர் ஞாயிறு முழு ஊரடங்கு விதிக்கப்பட்டதால் கொரோனா பரவல் வேகம் குறைந்துள்ளது என்றார். இந்நிலையில் இன்றைய கூட்டத்துக்கு பின் மேலும் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி