ஆப்நகரம்

மக்களே ஹேப்பி நியூஸ்: தமிழக அரசு மழை நிவாரணம் எவ்வளவு தெரியுமா?

ஜனவரி மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரணம் அறிவித்துள்ளார்.

Samayam Tamil 1 Feb 2021, 10:39 am
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையை உயர்த்தி அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
Samayam Tamil tn relief fund


தமிழ்நாட்டில் நிவர், புரெவி புயல்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஏற்கெனவே நிவாரணம் அறிவிக்கப்பட்ட நிலையில் ஜனவரி மாதம் பெய்த கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மழையால் பாதிக்கப்பட்ட 6.81 லட்சம் ஹெக்டேர் பயிர்களுக்கு நிவாரணம் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 11 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
சசிகலா சொல்லும் இரு மெசேஜ்: ஜெயலலிதா காரில் பயணம்!மத்திய அரசின் நிதி உதவியை எதிர்நோக்கி விவசாயிகளுக்கு ரூ 1116 கோடி நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் இடுபொருள் நிவாரணத் தொகை 13,500 லிருந்து 20,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மானாவாரி நெற்பயிர் தவிர அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் இடு பொருள் நிவாரணத் தொகை ரூ 10 ஆயிரமாக வழங்கப்படும்.
மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் - எடப்பாடி பழனிசாமி
பல்லாண்டு கால பயிர்களுக்கு இடுபொருள் நிவாரணம் ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ 18 ஆயிரத்திலிருந்து ரூ 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

2 ஹெக்டேர்களுக்கு மட்டுமே இடுபொருள் நிவாரணம் எனும் உச்ச வரம்பு தளர்த்தப்பட்டு உச்சவரம்பின்றி நிவாராணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி