ஆப்நகரம்

பொதுமுடக்கம் நீட்டிப்பா? -வழக்கம்போல் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ள முதல்வர்!

தமிழகத்தில் அமலில் உள்ள பொதுமுடக்கத்தை மேலும் நீட்டிப்பதா, இல்லையா என்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (ஜூலை 30) ஆலோசனை நடத்தவுள்ளார்.

Samayam Tamil 28 Jul 2020, 4:55 pm
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பல்வேறு தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. ஜூலை 31 ஆம் தேதியுடன் இந்த பொதுமுடக்கம் நிறைவடைய உள்ளது. ஆனாலும், சென்னையை தவிர்த்து, பிற மாவட்டங்களில் கொரோனா நோய்த்தொற்றின தாக்கம் பரவலாக அதிகரித்து வருகிறது.
Samayam Tamil discussion


இதனை கருத்தில் கொண்டு தற்போது நடைமுறையில் உள்ள பொதுமுடக்கத்தை மேலும் சில வாரங்கள் அல்லது மாதங்களுக்கு நீட்டிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ நிபுணர்களுடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

முன்னதாக, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள், பொதுமுடக்கம் நீட்டிப்பு ஆகியவை குறித்து அவர், மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை ( ஜூலை 29) ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை கலெக்டருக்கு கொரோனா..! பரபரப்பில் ஆட்சியர் அலுவலகம்...

தலைமைச் செயலகத்தில் இருந்து நடத்தப்படும் இந்த ஆலோசனை கூட்டங்களுக்கு பின், பொதுமுடக்கம் நீட்டிப்பு குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது.

முன்னதாக, தமிழகத்தில் இனி மேலும் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்று முதல்வர் அண்மையில் அறிவித்திருந்தார் என்பதும், பொதுமுடக்கம் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்தும் வழிமுறை கிடையாது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி