ஆப்நகரம்

151 மருத்துவம் சாரா பணியாளர்கள்: நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர்

இதய அறுவை சிகிச்சை சிறப்பு தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்பட 151 மருத்துவம் சாரா பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதல்வர் கே.பழனிசாமி நேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

TOI Contributor 11 Jul 2017, 12:27 pm
இதய அறுவை சிகிச்சை சிறப்பு தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்பட 151 மருத்துவம் சாரா பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதல்வர் கே.பழனிசாமி நேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
Samayam Tamil tamil nadu cm palanisamy handed over 151 job offer letters to medical technicians
151 மருத்துவம் சாரா பணியாளர்கள்: நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர்


இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் மற்றும் புதிதாக உருவாக்கப்படும் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பும் வகையில், நாட்டிலேயே முதல் முறையாக சுகாதாரத்துறைக்கென தனியாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் கடந்த 2012-ல் தமிழகத்தில் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் இதுவரை 8 ஆயிரத்து 692 மருத்துவர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள், 9 ஆயிரத்து 190 செவிலியர்கள் உள்பட 20 ஆயிரத்து 862 பேர் இந்த வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது இந்த வாரியத்தின் மூலம் இதய அறுவை சிகிச்சை சிறப்பு தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியிடத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 5 பேர், பிளாஸ்டர் தொழில்நுட்பக் கலைஞர்கள் தரம் -2க்கு தேர்வான 78 பேர், அனஸ்தீசியா தரம் -2க்கு தேர்வான 68 பேர் என மருத்துவம் சாரா பணியிடங்களுக்கு தேர்வான 151 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

இதன் அடையாளமாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் கே.பழனிசாமி 15 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tamil nadu CM Palanisamy handed over 151 job offer letters to medical technicians

அடுத்த செய்தி