ஆப்நகரம்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்தார்.

TOI Contributor 17 Aug 2017, 5:07 pm
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்தார்.
Samayam Tamil tamil nadu cm palaniswami announces one man inquiry commission to investigate jayalalithaas death
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு


இதுகுறித்து இன்று தலைமை செயலகத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், ‘’மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மாநிலத்தில் 6 முறை முதல்வராக இருந்தார். மாநிலத்திற்காக உழைத்து மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர். இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி, கடந்த 5.12.2016 அன்று மரணமடைந்தார். அவரது மரணம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாயின. ஊடகங்களும் இதுகுறித்து செய்திகள் வெளியிட்டன.

இதையடுத்து அவரது மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும். விரைவில் இந்த ஆணையம் அறிவிக்கப்படும். ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். இவர்கள் தமிழக அரசிடம் விரைவில் அறிக்கையை சமர்ப்பிப்பார்கள். விசாரணைக்கான காலம் வரையறுக்கப்படவில்லை.

மேலும், மறைந்த முதல்வர் வசித்த வேதா இல்லம் அவரது நினைவு இல்லமாக அறிவிக்கப்பட்டு, பொது மக்கள் பார்ப்பதற்கு திறக்கப்படும்’’ என்றார்.

Tamil Nadu CM Palaniswami announces one-man inquiry commission to investigate Jayalalithaa's death

அடுத்த செய்தி