ஆப்நகரம்

வெளிநாட்டு பயணத் திட்டங்கள் என்னென்ன?- தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை!

சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

Samayam Tamil 22 Aug 2019, 1:12 pm
வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு சுற்றுப்பயணம் செல்கிறார். அதாவது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அரசு முறை பயணம் சென்று, தமிழக நலனிற்கு பல்வேறு திட்டங்களைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளார்.
Samayam Tamil Palaniswami1


இந்தப் பயணம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வரை நீடிக்கிறது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தொழில்துறை அமைச்சர் சம்பத், சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், ஊரக தொழிற்துறை அமைச்சர் பெஞ்சமின் மற்றும் அரசு அதிகாரிகள் செல்கின்றனர்.

Also Read: ப.சிதம்பரத்தை தேவையில்லாமல் அவமானப்படுத்திக் கைது செய்துள்ளனர்- திருமாவளவன் கண்டனம்!

வெளிநாட்டு பயணத்தில் எங்கு, யாரை சந்திக்க வேண்டும், என்னென்ன ஒப்பந்தங்கள் கையெழுத்திட வேண்டும் என்பன பற்றி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

Also Read: டெல்லியில் துவங்கியது திமுக போராட்டம்... தலைவர்கள் பங்கேற்பு!!

அதில், அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, எம்.சி. சம்பத், காமராஜ் மற்றும் தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கல்வி, உணவு, எரிசக்தி துறை மற்றும் தொழில்துறை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

Also Read: ஒரு மாத பரோல், மேலும் சில வாரங்கள் நீட்டிப்பு- நளினிக்கு கருணை காட்டிய உயர்நீதிமன்றம்!

முன்னதாக முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தால், அவரது பொறுப்புகள் துணை முதலமைச்சர் அல்லது வேறு யாராவது அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் யாரிடமும் ஒப்படைக்கப்படாது என்று தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டில் இருந்தபடியே பேக்ஸ் வழியாக அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பி வைப்பார் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி