ஆப்நகரம்

ஆம்பூர் பிரியாணி அருமையான பிரியாணி - திருப்பத்தூர் விழாவில் முதல்வர் பழனிசாமி கலகல!

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்டத்தின் தொடக்க விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசியவற்றை இங்கே காணலாம்.

Samayam Tamil 28 Nov 2019, 11:57 am
வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட புதிய மாவட்டமான திருப்பத்தூர் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கான நிர்வாகப் பணிகளை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
Samayam Tamil Palaniswami


இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, இன்று முதல் திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய புதிய மாவட்டங்களும் அதிகாரப்பூர்வமாக செயல்படத் தொடங்கும்.

அரசு விழாக்களுக்குப் பணம் செலவாகும் வேளையில், பாடம் படிக்க வகுப்பறை கேட்கும் மாணவர்கள்!

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு ஏராளமான வரலாற்று சிறப்புகள் உண்டு. அவற்றில் ஆம்பூர் பிரியாணி உலகப் புகழ்பெற்றது. இந்த வழியாக செல்வோர் தவறாமல் சாப்பிட்டு விட்டு செல்லும் அளவிற்கு சிறப்பு வாய்ந்தது. இந்த மாவட்டத்தின் தலைநகர் திருப்பத்தூர் நகரம். இதன் பரப்பளவு 17.98 சதுர கி.மீ ஆகும்.

மக்கள் தொகை 11 லட்சத்து 11,812 ஆகும். திருப்பத்தூர், வாணியம்பாடி என 2 வருவாய் கோட்டங்கள், திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், நாட்றாம்பள்ளி ஆகிய 4 வட்டங்களும், 15 உள் வட்டங்களும் செயல்படும்.

சீமானின் இலவச கார் திட்டம்: அது இந்த கார் இல்ல வேற கார்!

திருப்பத்தூர் முதன்மை சாலையை ஒட்டியுள்ள 20 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த அரசு அலுவலகங்கள் கட்டித் தரப்படும். திருப்பத்தூர் சுற்றுவட்டாரங்களில் வேளாண்மை கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.

தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளதால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவது சரியல்ல என்ற பொய்யான கருத்தை பரப்பி வருகின்றனர். ஏற்கனவே மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளின் அடிப்படையிலேயே உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்தார்.

இன்று உதயமாகின்றன திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள்!

அடுத்த செய்தி