ஆப்நகரம்

முதலமைச்சருக்கு எதிராக இப்படியொரு திட்டமா! யார் அந்த முன்னாள் அமைச்சர்? ஏன் இந்த அடாவடி?

தமிழக அமைச்சர் பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஒருவர் போடும் திட்டங்களால், அவர் மிகுந்த பரபரப்பில் இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

Samayam Tamil 19 Aug 2019, 2:58 pm
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சர்கள் மீது ஏதாவதொரு குறை கண்டால், உடனே அவர்களை தூக்கி வீசிவிடுவார். ஆனால் தற்போதைய தமிழக முதலமைச்சர் பழனிசாமி அமைச்சர்கள் மீது எத்தனை குற்றச்சாட்டுகள் வந்தாலும், அதனை கண்டும் காணாமல் இருந்து வந்தார். இதனால் ஜெயலலிதா போன்ற ஆளுமை இல்லை என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக முன்வைக்கப்பட்டன.
Samayam Tamil Palaniswami1


இந்த சூழலில் தனது மூன்றாண்டு ஆட்சியில் முதல் முறையாக ஒரு அமைச்சரை நீக்கி, முதலமைச்சர் பழனிசாமி அதிரடி காட்டினார். அதாவது, சக அமைச்சர்கள் மீது வெளிப்படையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். மேலும் முதலமைச்சரை அலட்சியம் செய்யும் வகையிலும் பேசியுள்ளார்.

Also Read: இந்த பிரச்சனையை சும்மா விட மாட்டோம்- டெல்லியில் வரும் 22ஆம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்!

இதன் காரணமாக அவர் மீதான பழைய குற்றச்சாட்டுகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக வெளியே எடுத்து, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த மணிகண்டனை நீக்கம் செய்தார். இதேபோல் மேலும் சில அமைச்சர்களும் நீக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் பரவின. இதனால் தமிழக அமைச்சர்கள் பீதியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Also Read: ஊட்டி மலை ரயிலில் ஆசையாய் ஏறி, இப்படி ஏமாந்து போன பயணிகள்- ஏன் தெரியுமா?

அமைச்சரவையில் நீக்கப்பட்ட மணிகண்டன், அதன்பிறகு முதலமைச்சரை சந்திக்கவே இல்லை. இந்நிலையில் தற்போது அவரை சந்திக்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் முதலமைச்சர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த மணிகண்டன், முதலமைச்சருக்கு எதிராக ஏராளமான குற்றச்சாட்டுகளை டெல்லிக்கு அனுப்பி வைப்பேன் என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

முதலமைச்சர் பழனிசாமிக்கு ஆதரவாக செயல்படும் அமைச்சர்களின் சொத்து குவிப்பு விஷயங்களை ஆதாரங்களுடன் அளிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால் முதலமைச்சர், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் கலக்கத்தில் இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கிடையில் ஆச்சரியம் தரும் விஷயமாக, மணிகண்டன் திமுகவில் சேரவுள்ளதாக கூறப்படுகிறது.

Also Read: ஆசியாவின் 2-வது மிகப்பெரிய மண் அணை- பவானிசாகர் அணைக்கு இன்று 65 வயது!

தனக்கு முதலமைச்சர் பழனிசாமி ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைய தயங்க மாட்டேன் என்று கூறுவதாக தகவல்கள் பரவி கொண்டிருக்கின்றன. இந்த விஷயத்தால் அதிமுக வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி