ஆப்நகரம்

TN Government: 10 சதவீத இடஒதுக்கீடு: முதல்வர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவு செய்ய தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது.

Samayam Tamil 8 Jul 2019, 10:44 am
பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து முடிவெடுப்பதற்காக முதல்வர் பழனிசாமி தலைமையில் அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
Samayam Tamil All Parties meeting


பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதை தற்போது நடைபெற உள்ள மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்விலேயே நடைமுறைக்குக் கொண்டு வரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்திய மரு்ததுவ கவுன்சில் அனுப்பி வைத்துள்ளது.

இந்த விவகாரம் தொடா்பா தமிழக சட்டமன்றத்தில் சில தினங்களுக்கு முன்னர் திமுக சார்பில் கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது 10 சதவீத இடஒதுக்கீடு குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கையை சட்டப் பேரவையில் ஏற்றுக் கொண்ட முதல்வர் பழனிசாமி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்தார். அதன்படி இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், மாநிலத்தில் உள்ள முக்கியமான கட்சிகளின் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் இன்று மாலை 5.30 மணியளவில் நடைபெற உள்ளது.

மத்திய அரசு அமல்படுத்தவுள்ள 10 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ளும் மாநிலங்கள், 25 சதவீதம் மருத்துவக் கல்வி இடங்களை அதிகரித்துக் கொள்ளலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் தொிவித்துள்ளது.

மத்திய அரசின் இத்திட்டத்தை தமிழகம், கர்நாடகா தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளும் ஒப்புதல் தெரிவித்துள்ளன. மருத்துவத்துறையில் 25 சதவிகிதம் கூடுதல் இடங்கள் கிடைத்தாலும், ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 69 சதவீத இடஒதுக்கீட்டில் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்று தமிழக கட்சிகள் ஒருமனதாக கருத்து தொிவித்துள்ளன. இதன் அடிப்படையிலேயே இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது.

அடுத்த செய்தி