ஆப்நகரம்

சிஏஏ எதிர்ப்பு கோஷம், ஆளுநர் உரை, ஸ்டாலின் வெளிநடப்பு, சட்ட மன்றம் முதல் நாள்...

2020ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியுள்ள நிலையில், வெளிநடப்பு செய்த திமுக முதல்வர் பழனிசாமி குறித்தும், தேர்தல் அதிகாரி பழனிசாமி குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவு செய்துள்ளது...

Samayam Tamil 6 Jan 2020, 12:51 pm
2020ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்ற முதல் கூட்டம் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து ஆளுநர் உரையோடுதான் தொடங்கப்படும். அதன்படி பன்வாரிலால் புரோகித் உரையுடன் இன்று தொடங்கியது.
Samayam Tamil 201706160136566428_Interview-with-MK-Stalin_SECVPF


வழக்கம்போல் ஆளுநர் உரையைப் புறக்கணித்து திமுக வெளிநடப்பு செய்துள்ளது. இந்த முறை திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்ததற்கு அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறிய காரணங்கள்:

இன்று ஆளுநர் உரையைப் புறக்கணித்து திமுக சார்பில் நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம். தமிழ்நாட்டின் கடன் தொகை ரூ. 4 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. தொழில் வளர்ச்சி இல்லை.

திமுக வெற்றியால் வரலாறு மாறியுள்ளது - ஸ்டாலின் பெருமிதம்!

புதிய வேலை வாய்ப்புகளும் இல்லை. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் பதிலளிக்கவில்லை.

நாட்டின் மதச்சார்பின்மையைச் சிதைக்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரித்துள்ளது. இதனால் சட்டம் நிறைவேறியுள்ளது. இதன் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப் பட்டுள்ளது.

நடந்து முடிந்து உள்ளாட்சித் தேர்தலில் தேர்தல் அதிகாரிகளும், காவல் துறையும் அதிமுகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளது.

சமீபத்தில் புதுக்கோட்டையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அதிகாரி ஒருவரை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னையில் அக்கட்சி நிர்வாகிகள் ஒருமையில் பேசிய விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நீட் விவகாரத்தில் இப்போது மேல் முறையீட்டு மனுவை நீதிமன்றத்தில் போட்டுள்ளது. அனிதா உள்ளிட்ட 7 மாணவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் அதிமுக தொடர்ந்து நாடகங்களை அரங்கேற்றி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?- இன்று கூடுகிறது தமிழக சட்டமன்றம்!

தொடர்ந்து “உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் திமுகவுக்குத் தேய்பிறை எனக் காட்டுகிறது என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்” என நிருபர்கள் ஸ்டாலினை நோக்கி கேள்வி எழுப்பினர். இதற்குக் கடந்த முறை அதிமுக ஆட்சியிலிருந்தபோது திமுக பெற்ற வாக்கு சதவீதத்தை விட இப்போது அதிகரித்துள்ளது எனத் தரவுகளை வெளியிட்டார்.


மேலும் ஸ்டாலின், “மாநிலத் தேர்தல் கமிஷ்னர் பழனிசாமி தேர்தல் விதிமுறைகளை முதல்வர் பழனிசாமியின் பள்ளியில் படித்துள்ளார்” எனக் கருத்து கூறிவிட்டு சட்ட மன்றத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார். ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் வெளிநடப்பு செய்த சில நிமிடங்களில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களும் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.


இதற்கிடையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் கணக்கெடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடு உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்களை அச்சிட்ட கருப்பு டி-சர்ட் ஒன்றை அணிந்து வந்து சட்ட மன்ற வாசலி கொடியுடன் தனது எதிர்ப்பை தெரிவித்தார். தமிமுன் அன்சாரியின் செயலுக்கு அமமுக பொதுச் செயலாளர் தினகரன் வாழ்த்து தெரிவித்தார்.

அடுத்த செய்தி