ஆப்நகரம்

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்: மாவட்டம் வாரியாக

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு, இறப்பு மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்களின் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 19 Dec 2020, 9:38 pm
தமிழகத்தில் இன்றைய (19-12-2020) கொரோனா நிலவரத்தை மாவட்ட வாரியாக பாப்போம்.
Samayam Tamil file pic


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,127 பேருக்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 10 பேர் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,05,777ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் தற்போது 9,692 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 338 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 221937 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 214968 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 3947 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 116 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 51147 ஆக அதிகரித்துள்ளது. 49453 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 634 பேர் பலியாகியுள்ளனர்.


பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று ஒருவருக்குக்கூட கொரோனா உறுதி செய்யப்படவில்லை. இதுவரை இங்கு 2252 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2227 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 4 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். அதுபோல குறைந்தபட்சமாக அரியலூரில் இன்று ஒருவருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை இங்கு 4616 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் தற்போது 8 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அதிமுக கூட்டணிக்குள் கல் எறிகிறாரா ரஜினி? வெளியேறத் தயாராகிறதா பாஜக?

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 75,947 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,30,88,115 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 1,202 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 7,84,117 ஆக அதிகரித்துள்ளது. இன்று 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 11,968 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி