ஆப்நகரம்

நோயை விலைக்கு விற்கின்றனர்...பாலில் ரசாயனங்கள் உள்ளது குறித்து ராஜேந்திர பாலாஜி பகீர்

சில தனியார் பாலில் ரசாயனங்கள் கலந்துள்ளது உண்மை என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

TNN 28 Jun 2017, 12:50 am
சென்னை : சில தனியார் பாலில் ரசாயனங்கள் கலந்துள்ளது உண்மை என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil tamil nadu dairy minister alleges milk adulteration by private firms
நோயை விலைக்கு விற்கின்றனர்...பாலில் ரசாயனங்கள் உள்ளது குறித்து ராஜேந்திர பாலாஜி பகீர்


பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
நான் எல்லா தனியார் நிறுவன பாலையும் குற்றம்சாட்டவில்லை. பால் கலப்படம் குறித்து நான் கூறியதை சிலர் கேலி செய்து வருகின்றனர். என் புகாருக்கு பின்னர் பாலில் கலப்படம் செய்வது குறைந்துள்ளது. ஆனால் அதற்கு பதிலாக சில தனியார் நிறுவன பால் பவுடர்களில் ப்ளீச்சிங் பவுடர், காஸ்டிக் சோடா கலந்துள்ளது ஆய்வக பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

ரசாயனங்கள் கலந்த பாலை குடிப்பதால் பல்வேறு வியாதிகள் ஏற்படுகின்றது. மக்கள் இதை புரிந்து நல்ல பாலை வாங்கி பருகவேண்டும். கலப்பட பாலை தடை செய்யவும் அண்ணன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசுவேன்" என்று அதிரடியாக தெரிவித்தார்.

அடுத்த செய்தி