ஆப்நகரம்

தமிழகப் பள்ளிகளை திறக்க நடவடிக்கை; கல்வித்துறை சிறப்பு ஏற்பாடு!

கொரோனா நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட உத்தரவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Samayam Tamil 15 May 2021, 9:47 am

ஹைலைட்ஸ்:

  • நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு
  • பள்ளிகளை கொரோனா சிகிச்சை மையங்களாக பயன்படுத்த நடவடிக்கை
  • தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவுறுத்தல்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil TN School Reopen
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை காட்டுத்தீ போல பரவிக் கொண்டிருக்கிறது. நாள்தோறும் அதிகரித்து வரும் உயிரிழப்புகளால் பதற்றமான சூழல் நிலவுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை நேற்று ஒரேநாளில் புதிதாக 31,892 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 288 பேர் பலியாகியுள்ளனர். தினசரி அதிகரிக்கும் கொரோனா நோயாளிகளால் மருத்துவமனைகளில் படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதற்காக மாற்று ஏற்பாடுகளை மாநில அரசு முன்னெடுத்துள்ளது. தற்காலிக கோவிட்-19 சிகிச்சை மையங்களை ஏற்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக மாணவர்கள் நலன் கருதி கடந்த ஓராண்டாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்த சூழலில் ஆசிரியர்களை மட்டும் முழு ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு பள்ளிக்கு வரவழைக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டிருந்தது.

ஆரம்பமே இப்படியொரு அசத்தல்; திமுக அரசின் சர்ப்ரைஸ் செயல்பாடுகள்!

ஆனால் கொரோனா தீவிரம் காரணமாக சிகிச்சை அளிக்கும் முகாம்களை ஏற்படுத்த பள்ளிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பாக சென்னை நகரில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள், தனியார் பள்ளிகள் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசியும் போட்டாச்சு.. நிவாரணமும் வழங்கியாச்சு: கடமையை நிறைவு செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அதிக அளவிலான வகுப்பறைகள் இருக்கும். அவை பெரியதாகவும் காணப்படும். இங்கு படுக்கை வசதிகளை ஏற்படுத்தி கோவிட்-19 தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தால் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று மாநில அரசு கருதுகிறது. கடந்த ஆண்டு சென்னையில் உள்ள 66 பள்ளிகளில் கொரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்டன. இவற்றின் பயன்பாடு முடிவடைந்தவுடன் அனைத்து மையங்களும் மூடப்பட்டன.

தமிழக ரேஷன் கார்டுகளுக்கு அடுத்த ஜாக்பாட்; விரைவில் அறிவிப்பு!
இந்நிலையில் அந்தப் பள்ளிகளை மீண்டும் திறந்து கடந்த ஆண்டைப் போல சிகிச்சை அளிக்க அரசு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளையும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே எந்த நேரத்திலும் பள்ளிகளை ஒப்படைக்க தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையும், மாநகராட்சியும் அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த செய்தி