ஆப்நகரம்

சென்னை சென்ட்ரலில் விவசாயிகள் போராட்டம்!

‘விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்காவில்லை என்றால் வரும் மே 25 முதல் டெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்துவோம்’ என விவசாயி அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

TOI Contributor 25 Apr 2017, 10:28 am
சென்னை: ‘விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்காவில்லை என்றால் வரும் மே 25 முதல் டெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்துவோம்’ என விவசாயி அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
Samayam Tamil tamil nadu farmers protest in chennai central
சென்னை சென்ட்ரலில் விவசாயிகள் போராட்டம்!


தமிழக விவசாயிகளின் வங்கிக்கடன் தள்ளூபடி உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அய்யாக்கண்ணு தலைமையில், கடந்த 41 நாட்களாக, டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில், போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள், இன்று காலை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை வந்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அய்யாக்கண்ணு கூறுகையில்,’ டெல்லியில் போராட்டம் நடத்திய போது கொலை வழக்கு போடுவோம் என மிரட்டல்கள் வந்தது. கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக, பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார். தமிழக அரசியல் தலைவர்களின் ஆதரவுகாரணமாக 15 நாட்களில் முடிவு சொல்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதிலும் முடிவு கிடைக்காவிட்டால் மே 25 முதல் டெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்துவோம். பிரதமர் மோடி பார்க்க அனுமதி வழங்காததால் தான் அவர் அலுவலகம் முன் நிர்வாண போராட்டம் நடந்தது.

மீண்டும் போராட்டம்:

சென்னை சென்ட்ரல் வந்து இறங்கிய விவசாயிகள், சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

tamil nadu farmers protest in chennai central

அடுத்த செய்தி